

எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும் கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் ஆயிரம் பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள் என்று அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு டிவிட்டரில் குற்றம்சாட்டியிருந்தது. மேலும், ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம் என்று அந்த இயக்கம் தெரிவித்திருந்த நிலையில், இதுபோன்ற தவறு நடக்காது என உதயநிதி ஸ்டாலின் ரிடிவிட் செய்துள்ளார்.