சத்தமில்லாமல் திமுக, அமமுக புள்ளிகளை தூக்கிய ஈபிஎஸ்
மாற்றுக்கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். ஈரோடு மாவட்டம், பவானி பகுதியைச்சேர்ந்த திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சிலுவம்பாளையத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுக்கட்சியினர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
Next Story
