DMDK | தேமுதிகவை லாக் செய்ய.. அதிமுக கையில் இருக்கும் அஸ்திரம்-என்ன நடக்கும்? காத்திருக்கும் சர்ப்ரைஸ்

தேமுதிகவை லாக் செய்ய.. அதிமுக கையில் இருக்கும் அஸ்திரம்-என்ன நடக்கும்? காத்திருக்கும் சர்ப்ரைஸ்

தேமுதிகவை லாக் செய்ய.. அதிமுக கையில் இருக்கும் அஸ்திரம் - என்ன நடக்கும்? காத்திருக்கும் சர்ப்ரைஸ் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள்ள எப்ப சட்டமன்ற தேர்தல் நடைபெறும்ங்கர அறிவிப்பு வெளியாகும்னு பார்த்தா, தமிழகத்துல காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுருக்கு. மொத்தமா 37 மாநிலங்களவை உறுப்பினர்களோட பதவிகாலம் நிறைவு பெற நிலையில தமிழகத்துல 6 பேரோட பதவிகாலம் முடியுது. தமிழகத்த பொறுத்தவரைக்கும் திமுகல 4 எம்.பிக்கள் அதிமுக ல 2. இப்ப திமுகல என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, செல்வராசு அதிமுக ல தம்பிதுரை, அதிமுக சார்புல த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் இவங்க 6 பேரோட பதவிகாலம் ஏப்ரல் 2ஆம் தேதியோட நிறைவு பெறுது இந்த நிலையில தான் காலியாகும் எம்.பிக்களுகான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடக்க இருக்கு. வேட்புமனு தாக்கல் தொடக்கம் - பிப்ரவரி 20 இந்த அறிவிப்பு இப்ப திமுக அதிமுகவுக்கு சவால ஏற்படுத்திருக்கு காரணம் மாநிலங்களவை எம்.பி பதவிகள் குறிவெக்கும் கூட்டணி கட்சிகளால தான் இந்த சவால் திமுக, அதிமுகவுக்கு ஏற்படும். இந்த சமயத்துல அவங்களுக்கு இது ஒரு அழுத்தம்னு கூட சொல்லலாம். இப்ப இருக்கர சட்டமன்ற பலத்த வெச்சு பார்த்தா திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் உறுதி.

X

Thanthi TV
www.thanthitv.com