

பாஜக அலுவலகம் சென்ற தேமுதிக வேட்பாளர்கள் - தமிழிசை சவுந்தர ராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
இதே போல எல்.கே சுதிஷ், அழகாபுரம் மோகன்ராஜ், அழகர்சாமி, டாக்டர் இளங்கோவன் ஆகியோர் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை, சென்னை திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் தமிழிசையை சந்தித்து வாழ்த்து பெற்றதாக கூறிய சுதீஷ், திருச்சிக்கு பிரச்சாரத்திற்காக பிரதமர் வந்தால் நல்லது என்று வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். அப்போது எல்லா தொகுதிகளிலும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்று அவர் கூறினார்.