Dindugul Srinivasan | திண்டுக்கல் சீனிவாசன் ஓட்டு போடும் போது நடந்த சம்பவம்- வைரலாகும் குபீர் வீடியோ

Dindugul Srinivasan | திண்டுக்கல் சீனிவாசன் ஓட்டு போடும் போது நடந்த சம்பவம்- வைரலாகும் குபீர் வீடியோ

திண்டுக்கல் சீனிவாசன் ஓட்டு போடும் போது நடந்த சம்பவம் - வைரலாகும் குபீர் வீடியோ #admk #dindugulsrinivasan வாக்குச்சாவடி அதிகாரியின் உதவியுடன் வாக்களித்த திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன், அதிகாரியின் உதவியுடன் வாக்களித்துள்ளார். எம்.வி.எம். அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்த வந்த அவர், வாக்களிக்கும் அறையில் இயந்திரத்தைப் பயன்படுத்தியபோது, வாக்குப்பதிவு பொத்தானுக்குப் பதிலாக, அருகில் இருந்த லைட் எரியும் இடத்தில் அவர் அழுத்தியதாகத் தெரிகிறது. இதனால் குழப்பமடைந்த திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த அதிகாரியை உதவிக்கு அழைத்தார். தொடர்ந்து அதிகாரியின் உதவியுடன் அவர் தனது வாக்கைச் செலுத்திவிட்டு வாக்குச்சாவடியை விட்டு வெளியேறினார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவர் பட்டனை அழுத்திய போது, அங்கிருந்த மைக் மற்றும் வீடியோவில் இந்த உரையாடல்கள் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com