தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

x

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு தமிழர்களை கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளதாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லியில் இருந்து ஆள்வதால், ஏதோ அவர் நமக்கு "மேல்" என்று தன்னை நினைத்துக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை அப்படியே முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுவது, மிரட்டலுக்கு நாம் பணியவில்லை என்றால் கோபத்தில் முறைதவறி பேசுவது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்றும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்