Byelection | தாராபுரம் - காங். தேர்தல் பொறுப்பாளராக கணபதி சிவக்குமார் நியமனம்

தாராபுரம் - காங். தேர்தல் பொறுப்பாளராக கணபதி சிவக்குமார் நியமனம்

#dharapuram | #congress | #ganapathysivakumar

தாராபுரம் - காங். தேர்தல் பொறுப்பாளராக கணபதி சிவக்குமார் நியமனம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 31 மண்டலங்களாக தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கொளத்துப்பாளையம் மண்டல தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக, காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக மாநில தலைவர் மாணிக்கம் தாகூருக்கு கணபதி சிவக்குமார் நன்றி தெரிவித்துள்ளார். கூட்டணி வேட்பாளர் சத்தியபாமாவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் ஒன்றிணைந்து களப்பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தவெக அரசின் 100 நாள் ஆட்சி சாதனைகள், சிங்கப்பெண் படை, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்போம் என கணபதி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com