Udhayanidhi Stalin | துணை முதல்வர் விழா.. மக்கள் தலையில் கட்டு கட்டாக கரும்புகள்..
துணை முதல்வர் நிகழ்ச்சி - கரும்பு, வாழைத்தாரை அள்ளிச் சென்ற மக்கள்
சென்னை பல்லாவரத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் அலங்காரத்திற்காக கட்டப்பட்ட கரும்புகள் மற்றும் வாழைத்தார்களை பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திமுக சார்பில் பல்லாவரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆயிரம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார். நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்ட உடனே, அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த கரும்பு மற்றும் வாழைத்தார்களை ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் கட்டு கட்டாக தலையில் சுமந்து எடுத்துச் சென்றனர்.
Next Story
