ஆக்ஷனில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி
வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகள் - உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு அரசுத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். வட சென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில், பேருந்து நிலையங்களின் மேம்பாட்டு பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் குடிநீர் விநியோக கட்டமைப்பினை மேம்படுத்தும் பணிகள், கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகளை சீரமைத்தல் உள்ளிட்ட 238 பணிகளை நிறைவேற்ற உத்தரவிடப்பட்ட நிலையில், இதுவரை 8 இடங்களில் LPG மூலம் இயங்கக்கூடிய எரிவாயு மயானங்கள் அமைத்தல், 7 இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல் உள்ளிட்ட 47 பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
