"தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிராக பாஜக சதி" - ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு
தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிராக பாஜக சதி செய்வதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையில் அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்பிக்கள் ஆ.ராசா, அருண் நேரு, தங்க தமிழ்ச்செல்வன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் சந்தித்தனர். வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள கூட்டுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
Next Story