டெல்லி முதல்வர் யார்? பா.ஜ.க தலைமை எடுத்த முக்கிய முடிவு
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் ஆன பிறகும் முதல்வர் யார்? என்ற கேள்வி நீடித்து வருகிறது. எம்.பி.க்களில் இருந்து யாரும் முதல்வராக மாட்டார்கள்...சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்தே ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பிறகு, வரும் 16 அல்லது 17-ம் தேதி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்றும், அதில் பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Next Story