

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக, 4 சிறப்பு புலனாய்வு குழு வசம் 50 வழக்குகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, அமித்ஷா தெரிவித்தார்.
சாட்சியங்கள் அடிப்படையில் இரண்டாயிரத்து 600 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இதில் தனிநபர் சுதந்திரம் தொடர்பான உச்சநீதிமன்ற விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 1922 பேரின் முகங்கள், மென்பொருள் உதவியுடன் தான் அடையாளம் காணப்பட்டதாகவும், ஆதார் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறிய அமித்ஷா, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே, கலவரத்தில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.