டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. இது தவிர, அக்கட்சியின் வாக்குகளும் 4 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது. இந்நிலையில், இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த பி.சி.சாக்கோ தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சரிவு 2013 ஆம் ஆண்டு ஷீலா தீட்ஷித் முதலமைச்சராக இருந்த போதே தொடங்கி விட்டதாகவும், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி கவர்ந்து சென்று விட்டதாகவும் சாக்கோ தெரிவித்துள்ளார். அந்த வாக்குகளை காங்கிரஸ் திரும்பப் பெறமுடியாது என்றும், அந்த வாக்குகள் ஆம் ஆத்மி வசம் தான் நீடிக்கும் என்றும் சாக்கோ தெரிவித்துள்ளார்.