"மக்களின் வளர்ச்சி குறித்து பாஜக சிந்திக்கவில்லை" - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

வேலையின்மையால் உத்ரகாண்ட் மாநில மக்கள் பிற மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக செல்ல தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
"மக்களின் வளர்ச்சி குறித்து பாஜக சிந்திக்கவில்லை" - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
Published on

உத்ரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கதிமாவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பாஜக அரசு மக்களின் வளர்ச்சியை சிந்திக்காமல் சொந்த வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்துவதாக குற்றம் சாட்டினார். வேலையின்மையால் உத்ரகாண்ட் மாநில மக்கள் பிற மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக செல்ல தொடங்கியுள்ளதாக தெரிவித்த பிரியங்கா காந்தி, பொது முடக்கத்தின் போது காங்கிரஸ் கட்சியே பொதுமக்களுக்கு உதவி செய்ததாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com