"டெல்லியை லண்டன் போல் மாற்றுவேன்" - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர் பதவியில் அரவிந்த் கெஜ்ரிவாலை முன்றாவது முறையாக அமர்த்தும் வகையில் ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
"டெல்லியை லண்டன் போல் மாற்றுவேன்" - அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

2015-ம் ஆண்டு தேர்தலில் 67 இடங்களைப் பெற்று அபாரமாக வெற்றி பெற்ற ஆம்ஆத்மி கட்சி இந்த முறையும் வெற்றிக் கனியை பறிக்க திட்டமிட்டு தேர்தல் பணியை தொடங்கி உள்ளது .வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்க கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் படித்த ஆட்டிஷி மார்லேனா தலைமையில் தேர்தல் அறிக்கையை மூவர் குழு தயாரித்து வருகிறது.. தேர்தல் அறிக்கையானது 15 முதல் 20 ஆம் தேதிக்குள் வெளிவர வாய்ப்புள்ளது. தேர்தல் அறிக்கையில் அடுத்த 5 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி செய்யவிருக்கும் செயல் திட்டம் இருக்கும் .

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை மீண்டும் வெற்றி பெற வைத்தால், டோக்கியோ, லண்டன், பாரிஸ் போன்ற நகரங்களைப் போல டெல்லியை மாற்றுவேன் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் தெரிவித்திருந்தார் .. அந்த பிரசாரம் மக்களை எட்டி இருக்கும் என்று ஆம் ஆத்மி கட்சி நம்புகிறது ..

வீட்டுக்கே நேரில் சென்று அரசு சேவைகளை வழங்குவது டெல்லி அரசின் முன்னோடி முயற்சி என்றும் கேஜ்ரிவால் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வருகிறார். மூன்றாவது முறையும் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஆவாரா என்பது பாஜக மற்றும் காங்கிரஸ் அமைக்கும் வியூகத்தை பொருத்தே தெரியும்.

X

Thanthi TV
www.thanthitv.com