

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தேசியக் கொடியை பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா ஏற்றும் போது தவறுதலாக கயிற்றை மாற்றிப் பிடித்ததால் தேசியக் கொடி கீழ்நோக்கி வந்தது. சுதாரித்துக் கொண்ட அமித்ஷா தேசியக் கொடியை உடனடியாக ஏற்றினார்.