சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு : ஹெச்.ராஜா மீது வழக்குபதிவு

சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவிட்டதாக கூறி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு : ஹெச்.ராஜா மீது வழக்குபதிவு
Published on

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அவரின் மகள் கனிமொழி ஆகியோரை பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்ககோரி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இளமாறன் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து 5 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com