கோ-ஆப்டெக்ஸ் துணிகள் குறித்து விவாதம் - சட்டப்பேரவையில் சவால் விட்ட துரைமுருகன்

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் விற்கப்படும் துணிகளின் தரம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்கட்சியுடன் காரச்சார விவாதம் நடைபெற்றபோது கோ-ஆப்டெக்ஸ் சிறப்பாக செயல்படும் என அமைச்சர் துரைமுருகன் சவால் விட்டார்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் விற்கப்படும் துணிகளின் தரம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்கட்சியுடன் காரச்சார விவாதம் நடைபெற்றபோது கோ-ஆப்டெக்ஸ் சிறப்பாக செயல்படும் என அமைச்சர் துரைமுருகன் சவால் விட்டார். அதிமுக ஆட்சியில் விற்பனை செய்யபப்ட்ட கோ-ஆப்டெக்ஸ் துணிகள் தரமற்றது என அமைச்சர் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டுறவு நெசவாளர் சங்கங்களிடம் இருந்து துணிகள் கொள்முதல் செய்வதால், அவர்களை கொச்சைப்படுத்த கூடாது என கேட்டுக்கொண்டார்.அப்போது குறுக்கிட்ட துரைமுருகன் கடந்த ஆட்சியில் கோ-ஆப்டெக்ஸ் துணிகள் தரமற்றதாக இருந்ததால் 4 கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்யப்பட்டதாக கூறினார்.அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுககு 340 கோடி ரூபாய் மானியம் வழங்கியதை சுட்டிக்காட்டினார். மீண்டும் குறுக்கிட்ட துரைமுருகன், கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய துணிகள் தரமற்றது என குற்றம்சாட்டியதுடன், கடந்த ஆட்சியை காட்சிலும் திமுக ஆட்சியில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் திறம்பட செயல்படும் என சவால் விட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com