Dayanidhi Maran | "என்ன சொன்னாரு.." - EPS சொன்னதை சொல்லி அட்டாக் செய்த தயாநிதி மாறன்

Dayanidhi Maran | "என்ன சொன்னாரு.." - EPS சொன்னதை சொல்லி அட்டாக் செய்த தயாநிதி மாறன்

தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி - தயாநிதி மாறன் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவுடன், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், விசாரணைக்கு பயந்து பாஜகவிடம் அவர் சரண் அடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்... வடிவேல் காமெடி போல வந்துட்டாங்கைய வந்துட்டாங்க என்று எடப்பாடி பழனிச்சாமி கிண்டல் செய்து பேசினார் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கும்பகோணத்தில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என இருவரும் கலந்து கொண்டனர் இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்றார் தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பிரச்சாரக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசுகையில் எடப்பாடி பழனிச்சாமி துரோகி என்றும் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு சிபிஐ ED வந்தபோது வடிவேல் காமெடி போல வந்துட்டாங்கைய வந்துட்டாங்க என்று எடப்பாடி பழனிச்சாமியை கிண்டல் செய்து பாஜகவுடன் கூட்டணி வைத்தது இதற்காக தான் வஞ்சகம் செய்து பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழைய பார்ப்பதாகவும் இதற்கெல்லாம் துரோகி எடப்பாடி பழனிச்சாமி என்று கூறினார் டெல்லி தொடர்ந்து நம்மளை வஞ்சித்து வருகிறது தமிழ்நாட்டு மக்கள் முன்னேறக்கூடாது எனவும் உதயசூரியனுக்கு ஓட்டு போடவில்லை என்றால் உங்கள் எதிர்காலமே அழிந்துவிடும் எனவும் அதனால் வருகின்ற தேர்தலில் உதயசூரியன் பொறுத்திருக்கும் பட்டணை அமுத்தினால் மோடிக்கு ஒரு குட்டு அமித்ஷாவுக்கு ஒரு குட்டு துரோகி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு குட்டு ஒரு பொழுதும் தமிழ்நாடு துரோகிகளை வளர விடாது எனக் கூறி உரையை முடித்துக் கொண்டார்"

X

Thanthi TV
www.thanthitv.com