Dhayanidhi Maran | DMK vs BJP | மக்களவையில் சரமாரி கேள்விகளை எழுப்பிய தயாநிதி மாறன்
நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி
இந்தியா - ஜப்பான் இடையே ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். உயர்தர ஜவுளிகளை ஜப்பான் விரும்புவதாக கூறிய அவர், இந்த சந்தையில் இந்தியாவின்
ஜவுளித் துறை பயனடையாத வாய்ப்புகளை சுட்டிக்காட்டினார். PM-MITRA பூங்காக்கள் திட்டத்தில் ஜப்பானிய முதலீடுகள் எவ்வளவு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன? என்றும், ஜப்பானிய சந்தையில் இடம்பிடிக்க, இந்திய தயாரிப்பாளர்கள் தயாராகும் வகையில், அரசு எவ்வாறு ஊக்குவிக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 2024ல் ஜப்பான் இறக்குமதி செய்த மொத்த ஜவுளி மற்றும் ஆடைகளின் மதிப்பு என்ன? என்றும், அதே காலக்கட்டத்தில், ஜப்பானுக்கு இந்தியா ஏற்றுமதி செய்த ஜவுளி மற்றும் ஆடைகளின் மதிப்பு எவ்வளவு? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
