Cumbum MLA | குமுளி மலைச்சாலையில் நள்ளிரவில் கம்பம் எம்.எல்.ஏ. வாகனச் சோதனை
Cumbum MLA | குமுளி மலைச்சாலையில் நள்ளிரவில் கம்பம் எம்.எல்.ஏ. வாகனச் சோதனை
#cumbum #TVKMLA #Checkpost #thanthitv
குமுளி மலைச்சாலையில் நள்ளிரவில் கம்பம் எம்.எல்.ஏ. வாகனச் சோதனை தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா புதன்கிழமை நள்ளிரவில் குமுளி மலைச்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டார். சோதனையின் போது குமுளி போலீசாரும் உடனிருந்த நிலையில், ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் ரேஷன் அரிசி கடத்தல் எதுவும் கண்டறியப்படவில்லை. தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க, குமுளி மலைச்சாலை மற்றும் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அறிவுறுத்தியுள்ளார். மேலும், வருவாய்த் துறையினர் மற்றும் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் வலியுறுத்தியுள்ளார்.
