சாலையோரம் காத்திருந்த நரிக்குறவர் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த முதல்வர் ஸ்டாலின்
சாலையோரம் நின்றிருந்த நரிக்குறவ ஜோடியின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார். கடலூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் 2 நாள் பயணம் மேற்கொண்டார். நெய்வேலி அருகே உள்ள பெரியாக்குறிச்சி பகுதியில் சாலை ஓரத்தில் காத்திருந்த திருமணம் நிச்சயக்கப்பட்ட நரிக்குறவர் ஜோடியான சுரேஸ் மற்றும் வடிவு ஆகியோர் தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதலமைச்சர் அவர்களுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைத்தார்.
Next Story