DMK vs NTK | விமர்சித்த நாதகவினர் - மைக்கை பிடுங்கி திமுக நிர்வாகி செய்த சம்பவத்தால் பரபரப்பு

x

நாம் தமிழர் கட்சியினருடன் திமுகவினர் வாக்குவாதம்

திண்டிவனம் அருகே, நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபோது, திமுக நிர்வாகி ஒருவர் மைக்கை பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டேரிப்பட்டில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டத்தில் திமுக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக விமர்சித்துப் பேசினர். இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள் மேடையேறி நாம் தமிழர் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி, மைக்கைப் பிடுங்கி தாக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மயிலம் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்