கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி... மாணவர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கோவளத்தில், கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஊராட்சி மன்றத் தலைவர் ஷோபனா தங்கம் ஏற்பாட்டில் ஒரு மாத காலம் பீச் கிரிக்கெட் போட்டி நடத்தி முடிக்கப்பட்டது. திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட 274 அணிகள் பங்கேற்ற நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா, எஸ்.டி.எஸ் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை நடைபெற்றது. இந்த விழாவில், தொழிலதிபரும், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனருமான ஐசரி கணேஷ், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். கோவளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஷோபனா தங்கம், கோவளம் பகுதி மீனவர்கள், கிராம மக்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
