பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிவர்களால் கேரளாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு 16 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பருவ மழை முன்னதாவே துவங்கி உள்ளதால் தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.