ஜாமீன், முன் ஜாமீன் கோரும் நபர்களுக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
ஜாமின், முன் ஜாமின் கோரும் மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் புதிய நடைமுறையை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த முன்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இனி வரும் காலங்களில், ஜாமின், முன் ஜாமின் கோரும் மனுதாரர்கள் தங்களின் குற்றப்பின்னணி, வழக்கின் தற்போதைய நிலை உள்ளிட்டவற்றையும் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதில் தவறான தகவல்கள் இடம்பெற்றால் மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
