வன்கொடுமை சட்டத்தின் கீழ் கவுன்சிலர் கைது
பொள்ளாச்சியில் ஆட்டோ டிரைவரை சாதி பெயரை கூறி திட்டி, தாக்கிய திமுக கவுன்சிலர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆட்டோ டிரைவரான குமார் என்பவரை, இருசக்கர வாகனத்தில் வந்த பொள்ளாச்சி நகராட்சி தி.மு.க கவுன்சிலர் பெருமாள் என்பவர் சாதியை சொல்லி திட்டியதுடன் இரும்பு ராடால் தாக்கியதாக தெரிகிறது.
இது குறித்து குமார் அளித்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திமுக கவுன்சிலர் பெருமாளை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
Next Story
