மாமூல் கேட்டு மிரட்டிய கவுன்சிலர் மகன்...பாய்ந்த அதிரடி ஆக்சன்

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், மாமூல் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், அரசால் அனுமதி பெற்ற பார் நடத்தி வருகிறார். ராசிபுரம் 24-வது வார்டு உறுப்பினராக உள்ள கலைமணியின் மகன் லோகசரவணன், பார் உரிமையாளரிடம் மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், லோக சரவணன் மற்றும் ராஜாவை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்