கேரள முதல்வர் தலைமையில் உயர்மட்ட கூட்டம்: "கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை"

கொரோனா தாக்குதல், கேரளாவில் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கேரள முதல்வர் தலைமையில் உயர்மட்ட கூட்டம்: "கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை"
Published on
கொரோனா தாக்குதல், கேரளாவில் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா, தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், டிஜிபி, உள்துறை செயலர், சுகாதார செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், கேரளாவில் உள்ள வெளிநாட்டினர், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள், ரிசார்ட்ஸ் மற்றும் ஹோட்டல்களில் வசிக்கும் வெளிநாட்டினரின் தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில் பயணிகளை சோதிக்கவும், கொரோனா தாக்குதல் இருந்தால் விரைந்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்ட கூட்டத்தில், கொரோனா பாதிப்பு குணமடைந்த பின்னரே சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என அ​றிவுறுத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com