"Copy, Paste அரசியல்" - முதல்வரின் பரபரப்பு பதிலடி
"Copy, Paste அரசியல்" - முதல்வரின் பரபரப்பு பதிலடி 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை கொச்சைப்படுத்தியவர்கள், அது 'பூமராங்' ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள் என கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், அதிமுகவின் அழுத்தமே 5 ஆயிரம் உரிமைத்தொகை வழங்க காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை ஈபிஎஸ் உதிர்த்திருப்பதாக விமர்சித்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி உரிமைத்தொகையை நிறுத்தக்கூடும் என்பதால் தான் முன்கூட்டியே 5 ஆயிரம் ரூபாயை வரவு வைத்தோம் என விளக்கம் அளித்துள்ள அவர், திமுக அரசு சத்தமில்லாமல் நடத்திய surgical strike உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய HIT அடித்துள்ளது என கூறியுள்ளார். Copy, paste அரசியல் என்பது காலங்காலமாக அதிமுகவின் வாடிக்கை எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
