சர்ச்சை கருத்து.. மன்னிப்பு கேட்ட செல்லூர் ராஜு
தனது பேச்சால் ராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கதில் வெளியிட்டுள்ள பதிவில் இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் தனது உயிரினும் மேலான ராணுவ வீரர்களையும்,அவர்களது தியாகத்தையும் என்றும் வணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.செய்தியாளர் சந்திப்பின்போது தி.மு.க.வின் பேரணி குறித்து கேள்விக்கு, தான் சொல்லிய பதிலை தி.மு.க தொலைக்காட்சிகள் திரித்து போட்டுவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர் இது தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், தனது குடும்பம், முன்னால் மற்றும் இன்னால் இராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்து கொள்வதாக செல்லூர் ராஜூ குறிப்பிட்டுள்ளார்.
Next Story
