காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்ததும் மகிழ்ச்சியான முதல்வர் ஸ்டாலின்

திமுகவின் பல்வேறு கொள்கைகள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பிரதிபலிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...

டெல்லியில் சம்ருத பாரத் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக அனுப்பப்பட்ட கடிதம் வாசிக்கப்பட்டது. அதில், 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை கடந்து, தமிழ்நாட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்காக 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், இடஒதுக்கீடு தொடர்பான விவரங்களை குறிப்பிட்ட ஸ்டாலின், திமுகவின் பல்வேறு கொள்கைகள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பிரதிபலிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எதிர்வரும் அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com