PM Modi | Congress | பிரதமரை விமர்சித்து கேலி சித்திர வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்

x

"என் பெயர் நரேந்தர் சரணடைவதே என் வேலை" என்று பிரதமர் மோடியை விமர்சித்து காங்கிரஸ் கேலி சித்திர வீடியோ வெளியிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டதாக காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகின்றது. இந்நிலையில், பிரதமர் மோடியை மீண்டும் விமர்சித்து காங்கிரஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் தனது பெயர் நரேந்தர், தனது வேலை சரணடைவது என்றும், டிரம்பிடம் இருந்து கால் வந்தாலே அச்சமாக உள்ளது என்று பிரதமர் மோடி பாடல் பாடுவது போன்று உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்