தேர்தலுக்கு பின் முதன்முறையாக ராகுல் காந்தி தென்மாநிலம் வருகை

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் கேரளாவுக்கு வருகை தரவுள்ளனர்.
தேர்தலுக்கு பின் முதன்முறையாக ராகுல் காந்தி தென்மாநிலம் வருகை
Published on

குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று இரவு பிரதமர் மோடி கேரளா வருகிறார். விமானம் மூலம் கொச்சி வரும் அவர், இரவு எர்ணாகுளம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். இதையடுத்து நாளை காலை 8.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்குள்ள பள்ளி மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வயநாடு தொகுதிக்கு வருகை தருகிறார். இன்றிலிருந்து 3 நாட்களுக்கு வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க திட்டமிட்டுள்ளார். இன்று மாலை வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் சாலை பயணம் மேற்கொள்ளவிருக்கும், அவர் மொத்தம் 6 சாலை பயணங்களில் பங்கேற்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இரு தலைவர்களும் தென்மாநிலத்திற்கு முதன்முறையாக வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com