"காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி : சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவி என தகவல்"

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன், காங்கிரஸ், தேசிய வாத கட்சிகள் இணைந்து அமைக்க உள்ள ஆட்சியில் சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி : சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவி என தகவல்"
Published on

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன், காங்கிரஸ், தேசிய வாத கட்சிகள் இணைந்து அமைக்க உள்ள ஆட்சியில் சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவை தொடர்ந்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில், கடந்த செவ்வாய்கிழமை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.இந்த நிலையில்,தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

புதிய அரசை அமைக்க 3 கட்சிகளும் குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினார். கட்சிகளிடையே அதிகார பகிர்வு பேசப்பட்டதாகவும், புதிய அரசில் முதலமைச்சர் பதவி சிவசேனாவுக்கு அளிக்கப்படும் என்றும் தெளிவுப்படுத்தினார்.இதற்கிடையே 3 கட்சியின் தலைவர்களும் இன்று மாலை ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில், பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com