

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ராகுல் காந்தி நாளை இரவு லண்டன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மோதிலால் வோரா நியமிக்கப்படுவார் என தகவல் வெளியானது. எனினும், இதனை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் செயற்குழு புதிய தலைவரை தேர்ந்து எடுக்கும் வரை ராகுல் காந்தியே கட்சியின் தலைவராக இருப்பார் என தெரிவித்துள்ளது.