ஹரியானா மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜகவுக்கு இந்த முறை காங்கிரஸ் கடும் போட்டியை அளித்துள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது என்கிறார்கள். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளதும், கணிசமான வாக்குகளை பெற காரணமாக இருந்துள்ளது.