Congress Ganapathy Sivakumar | காமராஜர் குறித்து அவதூறு பேச்சு - காங்கிரஸ் கணபதி சிவக்குமார் கண்டனம்

காமராஜர் குறித்து அவதூறு பேச்சு - காங்கிரஸ் கணபதி சிவக்குமார் கண்டனம்

#Congress #GanapathySivakumar #Kamarajar #Jayalalithaa #DMK #TNPolitics #ThanthiTV Congress Ganapathy Sivakumar | காமராஜர் குறித்து அவதூறு பேச்சு - காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் கண்டனம் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் அரசியல் செயல்பாடுகளையும், அக்கட்சியினரின் பேச்சுகளையும் விமர்சித்துள்ளார். தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் திமுகவினர் தரம் தாழ்ந்த கருத்துகளைப் பேசி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் முன்னேற்றத்திற்குப் பெரும் பங்காற்றிய காமராஜர் குறித்து பொது விவாத நிகழ்ச்சியில் அவதூறாகப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் அவதூறாகப் பேசுவது கீழ்த்தரமான அரசியல் என்றும், திமுகவினரின் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பேச்சுகளைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கட்சித் தலைமையையும் சாடியுள்ளார். காமராஜர் குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் பேசியதாகக் கூறப்படும் கருத்துகளைக் கண்டிக்காத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கணபதி சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com