

அதிகாரிகளை மிரட்டி பணிய வைப்பது போன்ற செயல்களில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஈடுபடுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி மாநில வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் செயல்படும் கிரண்பேடியின் தொல்லை தாங்காமல் அதிகாரி ஒருவர் மரணமடைந்துவிட்டதாக பரபரப்பு குற்றம்சாட்டை முன்வைத்தார்.