Puducherry வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் காங். வேட்பாளர் ஈரம் ராஜேந்திரன்
வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் காங். வேட்பாளர் ஈரம் ராஜேந்திரன்
#puducherry | #congress | #election2026 வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் காங். வேட்பாளர் ஈரம் ராஜேந்திரன் இந்தியா கூட்டணி சார்பில் புதுச்சேரி முத்தியால் பேட்டை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈரம் ராஜேந்திரன் இன்று முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சோலை நகர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அப்பகுதி மக்கள் மாலை அணிவித்தும், பூக்களை தூவியும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் முத்தியால்பேட்டை தொகுதியில் தமக்கு எழுச்சியான வரவேற்பு இருப்பதைக் கண்ட ஆளுங்கட்சியினர் தோல்வி பயத்தில் தன் மீது அவதூறுகளை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.
