காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, கன்னியாகுமரியில் இருந்து கேரள வாகனத்தில் புறப்பட்ட தொண்டர்களை, உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெளி மாநில வாகனத்தை அனுமதிக்க மறுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையே, அனுமதி பெறுவதற்காக சென்ற பேருந்தின் மீது பார்வதிபுரம் அருகே மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதால் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. தப்பியோடிவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.