"ஓபிஎஸ் தொடர்பான புகார் விவகாரம்.. சட்டப்படி நடவடிக்கை.." - சபாநாயகர் அப்பாவு பேட்டி
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-ன் எம்.எல்.ஏ பதவியை பறிக்க வேண்டும் என தேனியைச் சேர்ந்த நபர் அளித்த புகாருக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஓபிஎஸ் தொடர்பான புகார் விவகாரத்தில் உரிய சட்ட ஆய்வு செய்து, பேரவை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
Next Story
