நிதியுதவி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

x

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் ஓடையில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரிசேரி கிராமத்தில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த திருப்பதி, லலிதா, பாக்கியம் ஆகிய மூவரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஷேக் அப்துல் ரஹ்மான், முகமது ஹபில், உபையதுல்லா ஆகிய மூவரும் ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்