`குண்டுவெடிப்பு சம்பவம்' அஞ்சலி செலுத்த வந்த பா.ஜ.க வினர் கோவையில் குவிக்கப்பட்ட 2,000 போலீஸ்

x

கோவை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி கோவை மாநகர் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 1998-ம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்