நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - திமுக செயல்தலைவர் ஸ்டாலின்

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து அரசுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியது குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - திமுக செயல்தலைவர் ஸ்டாலின்
Published on

2016 - 17 ஆம் ஆண்டிற்கான சி.ஏ.ஜி அறிக்கையில் அதிமுக ஆட்சி நிர்வாகம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அக்டோபர் 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் ஆயிரத்து 599.81 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் ஆதாரபூர்வமாக இன்றைக்கு தெரிய வந்திருப்பதாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். தற்போது வெளியாகி உள்ள சி.ஏ.ஜி அறிக்கை அதிமுக அரசின் இழப்புகளின் தொகுப்பாக உள்ளதாகவும், அமைச்சர்கள் அனைத்து துறைகளிலும் படு தோல்வியடைந்து விட்டார்கள் என்பதை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையென்றால் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com