``நான் போமாட்டேன்; அவர பாப்பேன்..'' ``முதல்வரை காண வேண்டும்..'' கதறி அழுத மூதாட்டியால் பரபரப்பு

x

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவர், முதல்வரை நேரில் பார்க்க தன்னை அனுமதிக்குமாறு கதறி அழுதார். தானும், தனது கணவரும் தி.மு.க.வில் உறுப்பினராக உள்ள நிலையில், தனது கணவர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

தனக்கு வீடு கட்டி தரக்கோரி முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் கோரிக்கை வைத்த நிலையில், அதுதொடர்பாக முதல்வரை சந்திக்க வேண்டுமென மூதாட்டி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்