"மத்திய அரசு நிதி விடுவிப்பதில் தாமதம்" - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

x

100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதிய நிலுவை தொகையாக, இரண்டாயிரத்து 118 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகளின் நிலை தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்திற்கு தமிழக அரசின் பங்காக 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில், கூடுதலாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தற்போது வழங்குவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய முதல்வர், மத்திய அரசு நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைய தாமதமாவதாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்