தொண்டர்களுக்கு திடீரென கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின் | DMK | Cm Stalin

x

மொழி மீது தாக்­கு­தல் நடத்தி, பண்­பாட்டை சிதைக்க வேண்­டும் என்பதே மத்திய பா.ஜ.க அரசின் கொள்கை என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மொழிப் போராட்ட வரலாறு குறித்து தி.மு.க தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு திணிக்க முயற்சிக்கும் இந்தி மொழியின் முகமூடியில் சமஸ்கிருத முகம் ஒளிந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். தேசிய கல்வி கொள்கை மூலம் தமி­ழர்­க­ளின் பண்­பாட்டை சீர்குலைக்க முயல்வதால் தான், இந்தி திணிப்பை தமிழகம் எதிர்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அர­சி­யல் களத்­தில் தி.மு.க-வை எதிர்க்கும் கட்சிகள் கூட இந்­தி திணிப்பை எதிர்ப்பதாகவும் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்