மகிழ்ச்சியின் உச்சம்..முதல்வரை கட்டிப்பிடித்து நன்றி.. நெகிழ்ச்சி காட்சிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் முதல்வரை சந்தித்து நன்றி கூறினர்.இதற்காக, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் - 1994 ஆகியவற்றில் வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த சூழலில், டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவரான தீபக் நாதன், அதன் பொதுச் செயலாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து மாற்றுத்திறனாளிகளின் சார்பில் நன்றி கூறினர்.
Next Story