முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் - எடுக்கப்படும் முக்கிய முடிவு
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பல முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story